சுந்தர்.சி எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. இந்த திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 350 தியேட்டர்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் தங்களது அடுத்த படைப்புக்கு ப்ரீ பிசினஸ் அடிப்படையில் வியாபாரம் நடப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த திரைப்படம் இன்று வரை எந்த ஒரு ஓடிடி தளங்களும் இதுவரை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை 4’ திரைப்படம் நல்ல விலைக்கு விற்றனர். ஒருவேளை இந்த ‘கேங்கர்ஸ்’ படம் வெற்றி பெற்றால் ஓடிடி தளங்கள் தானாகவே தேடிவரும் என்று தயாரிப்பு நிறுவனம் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.