Vijay TV KPY Sarath House Warming: 12 வருட போராட்டம்; சென்னையில் சொந்த வீடு வாங்கி குடியேறிய விஜய் டிவி சரத்! ரசிகர்கள் வாழ்த்து! – Vijay TV KPY Sarath Buy New house in chennai

Date:

- Advertisement -


விஜய் டிவி பிரபலங்கள், அடுத்தடுத்து தங்களின் கனவை நனவாக்கி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி மூலம் பிரபலமான சரத் 12 வருட போராட்டத்திற்கு பின்னர் சென்னையில் சொந்த வீடு வாங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

article_image1

திறமையால் ஜொலித்த பிரபலங்கள்:

எந்த ஒரு துறையிலும், திறமை மற்றும் முயற்சி இருந்தால் வெற்றிபெறலாம் என்பதற்கு உதாரணமாக பலர் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்… சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்து இன்று 300 கோடி வசூல் மன்னனாக மாறியுள்ள சிவகார்த்திகயேன் உள்ளிட்ட பலர் இதற்க்கு மிகப்பெரிய உதாரம்.

budget 2025
article_image2

KPY சரத்:

அப்படி தான், தன்னுடைய காமெடியை மட்டுமே நம்பி விஜய் டிவி கலக்க போவது நிகழ்ச்சியில் களமிறங்கியவர் KPY சரத். இவர் தீனாவுடன் இணைந்து செய்த காமெடி சேட்டைகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது அடுத்தடுத்து ஒரு சில படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்து வருகிறார்.

உன்னிகிருஷ்ணன் மகனுக்கு திருமணம்; மணமக்களை வாழ்த்திய வைரமுத்து!

article_image3

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

இன்னும் புகழ், பாலா, தீனா போல் முக்கியமான காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், விஜய் டிவி மூலம் தொடர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக இருந்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் தன்னுடைய காதலி கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் சரத். தற்போது சரத்தின் மனைவியும் சில வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவருமே சேர்ந்து, டிஸ்னி ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பான ஹார்ட் பீட் வெப் தொடரில் நைட்த்திருந்தனர். 

article_image4

புது வீட்டின் கனவு நிறைவேறியது :

article_image5

12 வருட போராட்டத்திற்கு பிறகு வீடு வாங்கிய சரத்:

இந்த புகைப்படங்களை சரத் போட்டிருக்கும் பதிவில், “நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி உள்ளது. சென்னையில் வீடு வாங்குவது 12 வருட போராட்டத்திற்கு பிறகு, ஒரு இடத்தை எங்கள் வீடு என்று அழைக்கும் நாள் வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி… என்னுடன் உறுதுணையாக இருந்த என் துணைவி கிரித்திகாவுக்கு ரொம்ப ரொம்ப. நன்றி ஐ லவ் யூ மா என தெரிவித்துள்ளார். ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

Download App:

  • android
  • ios





Source link

- Advertisement -

Top Selling Gadgets

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 14 =

Share post:

Subscribe

Popular

More like this
Related

Top Selling Gadgets